Rescue | கரும்பு மெஷினில் சிக்கிய வியாபாரி.. ஓடோடி வந்து மீட்ட மாணவர்கள்.. திக் திக் மீட்பு காட்சி
மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே, கரும்புச்சாறு இயந்திரத்தில் வியாபாரியின் சட்டை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் மூலம் இயங்கும் இயந்திரத்தில் கரும்புச்சாறு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சட்டை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதனை கவனித்த அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள், உடனடியாக சுதாரித்துக்கொண்டு இயந்திரத்தின் மோட்டாரை நிறுத்தினர். பின்னர், அவரது சட்டையை கிழித்து, வியாபாரியை பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.