தமிழ்நாடு

வீடியோ எடுத்த ரிப்போர்ட்டருக்கு நேரடி மிரட்டல்.. தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஹெட்லைட் எரியாமல் ஆபத்தான முறையில் சென்ற அரசு பேருந்தை வீடியோ எடுத்த செய்தியாளருடன், பேருந்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஹெட்லைட் எரியாததால் அதன் ஓட்டுநர், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்றார். இவ்வாறு ஆபத்தான முறையில் சென்ற பேருந்தை கொளக்குடி பேருந்து நிறுத்தம் அருகே செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர், செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்