தமிழ்நாடு

மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி விவரங்கள்...

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி 38 மக்களவை தொகுதி மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. முறைகேடு நடைபெற்ற வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தற்போது 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்ட 195-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தர்மபுரி மக்களவை தொகுதிக்குள் வரும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி 181 மற்றும் 182, நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 192 முதல் 195 எண் வாக்குச் சாவடிகள் மற்றும் ஜாலிப்புதூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் உள்ள 196 மற்றும் 197 எண் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவதிகள் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உள்ள 210 எண் வாக்குச்சாவடி, ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடி எண் 248-ல் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி எண் 67, வடுகப்பட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளி 197 -வது வாக்குச் சாவடியிலும் வரும் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி