மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் 100 ஆண்டுகள் மேல் பழமையான சாவடி பொதுமக்களின் முயற்சியால் புத்துயிர் பெற்று வருகிறது.பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியில் அமைந்துள்ள இந்த சாவடி பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் ஓய்வெடுக்கும் இடமாக இருந்தது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் இதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பீகாரை சேர்ந்த கட்டிட நிறுவனர்கள் ஒரு அடி அளவிற்கு சுற்றி ஜாக்கியை வைத்து பழமை மாறாமல் சாவடியை தூக்கி புனரமைத்தனர். இது முழுக்க முழுக்க அப்பகுதி மக்களின் சொந்த செலவிலேயே நடைபெறுகிறது.