ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இது போல் பதுக்கி விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும் என செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியை பயன்படுத்தி ரெம்டெசிவிர், கொரோனா சிகிச்சை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.