ரெம்டெசிவிர் மருந்து வேண்டி விண்ணப்பித்த 25 தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் கட்டமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரெம்டிசிவிர் ஊசி மருந்தை சென்னையில் வழங்கினார். ரெம்டிசிவிர் மருந்துக்காக மக்கள் நாட்கணக்கில் காத்து கிடந்ததால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக மருந்துகள் விற்பனை செய்ய அரசு முடிவெடுத்தது. இதன்படி 294 தனியார் மருத்துவமனைகள் இணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 172 மருத்துவமனைகள் உடனடி தேவை என்ற அடிப்படையில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் 25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் குப்பிகளை முதல் கட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டரங்கில் வழங்கினார்.