TN Rain | திருச்செந்தூரில் விடாமல் நொறுக்கிய கனமழை - சிவன் கோயிலில் புகுந்த மழைநீர் #Thoothukudi #Thiruchendur #tnrain #rainfall #thanthitv தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. கோட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்துப் பணிமனை மற்றும் சிவன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோவிலுக்குள் செல்ல முடியாததால் வெளியே நின்றபடியே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், நகராட்சி பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.