தமிழ்நாடு

அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது...

தந்தி டிவி

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

• இதனால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதைத் தொடர்ந்து அணையில் இருந்து முதல் கட்டமாக 7 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. • பின்னர் 25 ஆயிரத்து 488 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 500கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. • இதையடுத்து பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், மேடான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பவானிசாகரில் இருந்து 16 ஆயிரத்து 663 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

• இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் கிராம மக்களுக்கும், பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் ஆற்றில் இறங்கவும், பரிசலில் செல்லவும், துணி துவைக்கவும் தடை விதித்து ஒலி பெருக்கியின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. • அதே போன்று பெரியகொடிவேரி, மேவானி, புளியம்பட்டி உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர கிராமங்களிலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு