தமிழ்நாடு

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என தெரிவித்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையே, விடுதலை தொடர்பாக, தமிழக உள்துறை செயலாளரிடம் கொடுத்த மனுவை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு, 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்