தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு ரெய்டில் சிக்காமல் இருக்க பத்திரப்பதிவு ஆபிஸில் நடந்த அமானுஷ்ய பூஜை.. வீடியோ எடுக்காதே என மிரட்டல்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருஷ்டி கழிக்கப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், அரகண்டநல்லூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இத்தகைய சூழலில் திருக்கோவிலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருஷ்டி கழிப்பு நடந்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு பூஜையில் திருக்கோவிலூர் சார்-பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறாமல் இருக்கவும், அப்படி நடைபெற்றால் அதில் சிக்காமல் இருக்கவும் சிறப்பு பூஜை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்