தமிழ்நாடு

ஆனி கடைசி முகூர்த்த தினம் - பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு செம அறிவிப்பு

தந்தி டிவி

ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று, சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று, அதிக பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்குமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திர பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கனும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு