Reels | மயிலாடுதுறை MLA வெளியிட்ட `ரீல்ஸ்’ - போராட்டத்தில் குதித்த டாக்டர்கள்
#mayiladuthurai #mla #doctor
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஜமால் முகம்மது யூனூஸ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒருமையில் கண்டித்து பேசியதுடன், அந்த வீடியோவை முகநூலில் ரீல்ஸாக வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவர்களும் கருப்புப் பேட்ச் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ உடனடியாக அந்த ரீல்ஸ் வீடியோவை நீக்க வேண்டும் மற்றும் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.