செங்குன்றம் அருகே லாரியில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட ஒரு லாரி கடந்த 3 மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியை போலீசார், சோதனை செய்த போது, உமி மூட்டைகளுக்கு அடியில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.