தமிழ்நாடு

திடீரென வீடுகளுக்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

திடீரென வீடுகளுக்குள் படையெடுக்கும் சிவப்பு அட்டை பூச்சிகள் - அதிர்ச்சி காட்சிகள்

ராசிபுரம் அருகே ஆயிரக்கணக்கான அட்டை பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது.

இங்கு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அருகில் உள்ள மலைப் பகுதியிலுள்ள மரங்களில் இருந்து மர அட்டைகள் எனப்படும் சிவப்பு அட்டை பூச்சிகள் ஆயிரக்கணக்கில் ஊருக்குள் நுழைந்து, வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.

கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் இதனால் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இந்த பூச்சிகள் உணவுப் பொருள்களிலும் விழுந்து விடுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இதற்கு என்ன தீர்வு எனத் தெரியாமல் கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி