தமிழ்நாடு

9 ஐஏஎஸ்-களை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை

உதவி பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

9 ஐஏஎஸ்-களை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை

உதவி பேராசிரியர், முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவி வகித்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் தேர்வு, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளின் போது, தாங்கள் சரியாக எழுதிய விடைகளை தவறு என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த விடைகள் சரியானது என பாடப்புத்தகங்களில் இருப்பதாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் கௌதமன், லட்சுமிகாந்தன், அசோக்குமார், தாமோதரன் மற்றும் சிமியோன் ஆகிய 5 பேர் மேல்முறையீடு செய்தனர்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையம், தற்போது அதிரடியான உத்தரவுகளையும், பரிந்துரைகளையும் பிறப்பித்திருக்கிறது.அதன்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தலைவர் முத்துராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும்,அந்த வாரியத்தில் தலைவர் பதவிகளை வகித்தவர்கள் பொறுப்பின்றி செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைகழித்திருக்கிறது என்றும்,9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் பணியில் இருந்து அனுப்ப வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன்படி, 2011-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பல தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் , பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாநில தகவல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.அதன் அடிப்படையில் 2011 முதல் கடைசியாக பதவி வகித்த லதா வரை ஒன்பது அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் , ஜெகன்நாதன்,ஸ்ரீனிவாசன், நந்தகுமார் , ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை அளித்துள்ளது.இந்த ஒன்பது பேரில் சுர்ஜித் சவுத்ரி, விபு நாயர் தவிர்த்து மற்ற ஏழு அதிகாரிகளும் பணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்