தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் 6 ஆயிரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அத்துறையின் இணை இயக்குனர் ஷாகுல் ஹமீது, தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.