Srivilliputhur | Tiruppati | கிளியுடன் ஏழுமலையானை அடைந்த.. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! #Srivilliputhur #Tiruppati #Andal #Tirumala ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளியுடன் கூடிய மாலை, திருப்பதியை வந்தடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெற உள்ளது. இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளியுடன் கூடிய மாலை, இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, யானைகள் அணிவகுக்க, நாதஸ்வர இசையுடன் நான்கு மாட வீதிகளில் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மாலை நாளை காலை மூலவர் மற்றும் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட உள்ளது.