தமிழ்நாடு

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.

தந்தி டிவி

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ 10 தொகுதிகளில் மறு வாக்கு பதிவு நடத்துவது குறித்த அறிக்கை இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். திருவள்ளூர், கடலூர் மற்றும் தருமபுரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையை பரிசீலித்து 10 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று அவர் கூறினார். பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இருககாது என்று கூறிய சத்யபிரதா சாஹூ அங்கு வாக்குப்பதிவு நடந்த இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

தேர்தல் விதிகளை மீறியதாக 4 ஆயிரத்து 690 வழக்குகளும், சுவர் விளம்பரங்கள் செய்ததாக 3 ஆயிரத்து 732 வழக்குகளும்,பண பட்டுவாடா செய்ததாக 565 வழக்குகளும் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேபோல் அதிமுக, திமுக உள்ளிட்ட பலஅரசியல் கட்சிகள் மீதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதாசாஹூ தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி