தமிழ்நாடு

சஸ்பெண்ட்-ல் இருந்து பணி ஓய்வு...2008-ல் RDO செய்த காரியம் - வெளியான அதிர்ச்சி தீர்ப்பு

தந்தி டிவி

கடலூரில் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆன்டு சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய குழந்தைவேல் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குழந்தைவேல் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலேயே பணி ஓய்வு பெற்ற குழந்தைவேலுக்கு தற்போது 72 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்