தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் சட்டவிரோதம் இல்லை - ரிசர்வ் வங்கி

கூட்டுறவு வங்கிகளை, இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து இரு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதற்கு, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 6 வார அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த மனுக்களை அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்துவதற்காகவும் முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதால், சட்டவிரோதமும் எதுவும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மோசமான நிதி நிலை காரணமாக கடந்த 20 ஆண்டுகளில், நாடு முழுவதும் 430 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்