தகவல் தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே ஐ.டி. பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 12 ஆயிரத்து 524 கிராமங்களில் இணையதள சேவையை வழங்கி அதன் மூலம் கேபிள் டிவி, சாட்டிலைட் போன் என அனைத்து வசதிகளையும் கொண்டு வரும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.