கிராமசபை கூட்டம் ரத்து செய்த விவகாரத்திற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயமற்ற செயல் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டே, கிராமசபை கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.