தேனி எம்.பி, ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை, மார்ச் 6 ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேனி வாக்காளர் மிலானி, வழக்கு தொடுத்தார். இதை தொடர்ந்து, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, ரவீந்திரநாத் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவீந்திரநாத்குமாரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த மிலானிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.