தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் - 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

தந்தி டிவி

பணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தால் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் எனவும் கூறினார் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்