தமிழ்நாடு

ராசிபுரம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதியம்பட்டி திருமணித்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டியில் இருந்த தற்காலிக தரைப்பாலம் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 4 கிராமமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயம் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் திருமணிமுத்தாறில் தண்ணீர் பாய்ந்தோடுவதால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்