தமிழ்நாடு

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தன்னம்பிக்கையுடன் பல அசாத்திய வேலைகளை செய்து வருகிறார்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அத்திபலகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர சேகர். இவருக்கு, 3 வயதிலேயே, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. எனினும், சிறு வயதில் இருந்தே மரம், கம்பம் என எதிலும் சுறுசுறுப்பாக ஏறி விடும் சந்திரசேகருக்கு, மைக் செட் அமைக்கும் பணி செய்து வந்த ஒருவர், வேலை அளித்துள்ளார். இதையடுத்து, தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கிய சந்திரசேகர், உயரமான கோவில் கோபுரங்கள், மரங்கள் என அனைத்திலும், யாருடைய உதவியும் இன்றி, தனியாகவே ஏறி மைக் செட்டை கட்டி விடுகிறார். அதுமட்டுமில்லாமல், எந்த நான்கு சக்கர வாகனத்தையும் தனியாக இயக்கும் திறன் கொண்ட சந்திரசேகர், வீடு வீடாகச் சென்று தண்ணீர் கேன் போடும் வேலையையும் பார்க்கிறார். மாற்றுத்திறனாளிகள் பலருக்கு நம்பிக்கை அளித்து வரும் சந்திரசேகருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்