திமுக பிரமுகருக்கு 10 ஆண்டு சிறை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.