தமிழ்நாடு

மருதமோ எந்தன் காவியமோ- Vibe மோடில் ஜினுக்கு ஜிங்காரி... ஈழ ராப் இசையும்; வாகீசன் வாய்ஸும்..!

தந்தி டிவி

கேட்ட உடன் வைப் ஆக வைக்கும் இலங்கையை சேர்ந்த இளைஞர்கள் குழுவின் ராப் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

தமிழ் ராப் பாடல் என்றால் ஹிப் ஹாப் ஆதி தான் என நினைத்துக் கொண்டிருந்த சூழலில் தான், இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது இந்த பாடல்..

இந்த பாடலின் குரலுக்கும், வரிகளுக்கும் சொந்தக்காரர் இலங்கை ராப் பாடகர் வாகீசன் ராசய்யா. தனது நண்பர்களுடன் இலங்கையில் ஹோட்டல் ஒன்றில் இயல்பாக பாடிய பாடல், சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

இதற்கு முக்கிய காரணம் காதுக்கு இனிமையான தமிழ் வரிகள் தான் என சொல்லலாம். அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி, வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி என கேட்கும் போதே தாளம் போட வைக்கிறது பாடல் வரிகள்...

ஏராளமானோர் இப்பாடலுக்கு வைப் செய்ய தொடங்கி விட்ட நிலையில், ரீல்ஸ்களும் செய்யத் தொடங்கி விட்டனர் இணையவாசிகள்...

இதுமட்டுமா பலர் இந்த பாடலை தங்கள் குரலில் பாடி பதிவேற்றம் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்பாடலை பலர் பாராட்டி வரும் சூழலில், பாடலாசிரியர் யுகபாரதி, இப்பாடலை பாடிய வாகீசனை பாராட்டியிருக்கிறார்...

இப்படி பாராட்டு மழையில் நனைந்து வரும் வாகீசன், அடுத்தடுத்த பாடல்களை வெளியிடுவதில் பிசியாகிவிட்டார். அதேபோல் இந்த குழுவில் உள்ள ஆத்விக் உதயகுமார், டிஜே சிவாஜி ஆகியோருக்கும் பாப்புலாரிட்டி கிடைத்திருக்கிறது...

இந்த சூழலில் தான் ஓவர்நைட்டில் பிரபலமான வாகீசன், விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாகவும், இது தொடர்பாக விஜய் ஆண்டனியை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது...

இதனால் வாகீசன் மட்டுமன்றி அவரது ரசிகர்களும் குஷியில் உள்ளனர். 

Annamalai | GenZ | இத்தனை லட்சம் பேரா..?! மிரளவிட்ட GenZக்கள் TN அரசியலை திருப்பிய மெகா சம்பவம்

Court | Thiruchendur | திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி விவகாரம் - கோர்ட் அதிரடி உத்தரவு

Madurai | High Court | கேட்டதோ உடல்நல மெடிக்கல் ரிப்போர்ட் ஆனால்வந்ததோ... அதிர்ந்த நீதிமன்றம்

Minister ArunRaj | Hospital | மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

TNEB | Minister CTR | ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை