பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என மாணவர் சேர்க்கை செயலாளர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 28ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பலாம் என்றார். இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என்றும் தில்லைநாயகி தெரிவித்தார்.