தமிழ்நாடு

மலைக்கோயிலில் மயங்கி விழுந்த பக்தர் படியில் பிரிந்த உயிர் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைக்கோயிலில் படிகளில் ஏறிச் சென்ற பெங்களூர் சேர்ந்த பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் ஆயிரத்து 305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குடும்பத்துடன் சென்றார். பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்த முத்துக்குமார், படிகளில் ஏறிச் சென்றார். ஆயிரத்து 200 வது படியை கடந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே முத்துக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்