தமிழ்நாடு

Ranipettai Accident | பள்ளி வேனில் இருந்து இறங்கிய அக்கா | சக்கரத்தில் சிக்கி பலியான குழந்தை

Ranipettai Accident | பள்ளி வேனில் இருந்து இறங்கிய அக்கா | சக்கரத்தில் சிக்கி பலியான குழந்தை

thanthitv

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியனூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலின் மகள் பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தையை அழைத்துச் செல்ல அவரது தாய் வந்திருந்தார். மகளை வேனில் இருந்து இறக்கியபோது, இரண்டரை வயது மகன் ஹேம்நாத் எதிர்பாராத விதமாக வேனின் அடியில் சென்றதாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் வேனை இயக்கிய ஓட்டுநரால், முன்பக்க சக்கரத்தில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனக் கூறி பெற்றோர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''