தமிழ்நாடு

கச்சத்தீவு அருகே, சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 12 பேர் மீது திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் அந்நாடு நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் மீது முதல் முறையாக 2018 திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் மீனவர் ஒருவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். அதனை கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் படகுகளுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என, மத்திய அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு