ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே பயணிகள் சேவை குழுவினர் ஆய்வு நடத்தினர். பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், தங்கும் அறை, உணவு விடுதிகள் ஆகிய இடங்களில் இருந்த பயணிகளிடம் வசதிகள் பற்றி கேட்டறிந்தனர். இதனையடுத்து குழுவின் தலைவர் ரமேஷ் சந்திரா ரத்தன் தெரிவிக்கையில், மதுரை கோட்டத்தில், ரயில் நிலையங்களை சுகாதாரமாக பராமரிப்பது போல வேறு எங்கும், நாங்கள் பார்க்கவில்லை என தெரிவித்தார். ராமேஸ்வரம் ரயில் நிலைய, சுத்தம் சுகாதாரமான, பராமரிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை அளிப்பதாவும் அவர் அறிவித்தார்.