தமிழ்நாடு

கையை வைத்தாலே புண்ணாக்கு போல் பெயர்ந்து வரும் புதிய சாலை

தந்தி டிவி

பாம்பன் பாலம் அருகே தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தின் இறக்கத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை குண்டும், குழியுமாக கிடந்த தார்சாலை நேற்று இரவு புதிதாக போடப்பட்டது. அந்த சாலையானது தரமற்ற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தங்களுடைய கை மற்றும் கால்களினால் சுரண்டினாலே அலேக்காக பெயர்ந்து வருவதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். அவற்றை முழுமையாக அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்