தமிழ்நாடு

பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள் - ஆர்வமுடன் கண்டுரசித்த சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை, ஒரே நேரத்தில் 4 கப்பல்கள் கடந்து சென்றதை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை, ஒரே நேரத்தில் 4 கப்பல்கள் கடந்து சென்றதை, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பாம்பன் தூக்குப்பாலம் கடந்த 30நாட்களாக திறக்கப்படாததால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மண்டபம் பகுதிக்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்படிருந்தது. இந்நிலையில் நேற்று தூக்குபாலம் திறக்கப்பட்டதால், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு ஏராளமான விசைப்படகுகள் தூக்குப்பாலம் வழியாக கடந்து சென்றது. இதனை தொடர்ந்து கோவாவில் இருந்து கொல்கத்தா செல்லும் சரக்கு கப்பல் மற்றும் , மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் மிதவை கப்பல், கொச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் இழுவை கப்பல், சென்னையில் இருந்து கொச்சிக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் என அடுத்தடுத்து வரிசையாக தொடர்ந்து நான்கு கப்பல்கள் தூக்குப்பாலம் வழியாக கடந்து சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்