ராமேஸ்வரத்தில் மீனை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புரட்டாசி மாதம் மற்றும் நவராத்திரி விரதம் தொடங்கிய நிலையில் ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் சிறு தொழில் மீனவர்கள் கடலில் இருந்து மீனை பிடித்து வந்தும் விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மீன்கள் அதிகளவு கிடைத்தும் பொதுமக்கள் மீன் வாங்குவது குறைந்துள்ளதால், அவை கருவாட்டிற்காகவும், கோழி தீவனத்திற்காகவும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.