Ramanathapuram | ஸ்லாப் உடைந்து கழிவுநீர் கால்வாயில் இறங்கிய அரசு பஸ் - சில நொடி பதறிய பயணிகள்
#ramanathapuram #thanthitv
ராமநாதபுரத்தில் கழிவுநீர் கால்வாயில் இறங்கிய அரசுப்பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரை மேம்பாலம் பகுதியில் அரசு பேருந்து விபத்தில் சிக்கியது. நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய அரசுப்பேருந்து, சாலையோர கழிவுநீர் கால்வாய் மீது ஏறியபோது ஸ்லாப் உடைந்து முன்சக்கரம் கால்வாயில் இறங்கியது. இந்த விபத்தியல் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பகுதியில் சாலை குறுகலாக இருப்பதும், வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயற்சிப்பதும் இத்தகைய விபத்துகளுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.