தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து மனைவிக்கு ரூ.3 கோடி பணம் அனுப்பிய கணவர் - வீட்டிற்குள் சேர்க்க மறுத்த மனைவி

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் ராஜா. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த 2017ல் ஹைருன் ஜாலியா என்பவருடன் திருமணமான நிலையில், இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சம்பளப் பணம் அனுப்பி வந்த அன்வர் ராஜா, சுமார் 3 கோடி ரூபாய் வரை மனைவியின் வங்கி கணக்குக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பணத்தை நிலமாகவும், நகைகளாகவும் மாற்றி சேமித்து வருவதாக அன்வர் ராஜாவின் மனைவி மற்றும் மாமியார் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அன்வர் ராஜா, தன்னை தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சேர்க்க மறுத்து அடித்து விரட்டுவதாக கூறிய நிலையில், இது குறித்து அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

DMK | Congress | Puducherry | வாபஸ் அவகாசம் நிறைவு.. திமுக தொகுதியில் ட்விஸ்ட் கொடுத்த காங்கிரஸ்

Breaking |ECI | Election | "சிக்கியது ரூ.408 கோடி.." - அதிரவிடும் ரெய்டு.. தமிழகம் எங்கும் பரபரப்பு

US Israel Iran War | ஈரானின் முக்கிய தளபதி கொலை? - இஸ்ரேல் தாக்குதலில் பயங்கரம்

TN Election 2026 | தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - பரபரப்பு தகவல் கொடுத்த அர்ச்சனா பட்நாயக்

MDMK | Vaiko | சொந்த தொகுதியில் இறங்கும் வைகோ..? வேறு எந்தெந்த தொகுதிகள்? வெளியான மதிமுக லிஸ்ட்