தமிழ்நாடு

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி - குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் படி, 20 லட்ச ரூபாய், அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி, ஆறுதல் கூறினார். அப்போது ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை கலங்க வைத்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், தன்னலம் கருதாமல், ராணுவ வீரர் பழனி, தமது இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டதாக, மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் புகழாரம் சூட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்