தமிழ்நாடு

வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி பாலியல் தொந்தரவு - இளம்பெண் புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண், வழக்கு விஷயமாக பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் என்பவரை அணுகி உள்ளார். இந்த வழக்கை நடத்துவதற்கு பணத்தை பெற்றுக்கொண்ட வழக்கறிஞர் அரவிந்த், அந்த பெண்ணிடம் பழகி, வழக்கை எதிராக முடித்து விடுவதாக கூறி அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்ணின் தங்கையையும், தன்னுடைய ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வழக்கறிஞர் அரவிந்த் மீது மாவட்ட எஸ்.பி வருண்குமாரிடம் இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர்பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கறிஞர் அரவிந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்