தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் தாக்கியதாக நோயாளி குற்றம்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர், சிகிச்சை பெற வந்த இடத்தில் செக்யூரிட்டிகள், தன்னை கடுமையாக தாக்கியதாகவும், தலையில் காயம் ஏற்படுத்தி சட்டைகளை கிழித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றி விட்டதாகவும், மருந்து மாத்திரை ஏதும் எழுதி தரவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். மருத்துவ ஊழியர்களை தாக்கியதாக போலீசில் புகாரளிப்போம் என மருத்துவமனை நிர்வாகம் மிரட்டியதாகவும் ஹரிகிருஷ்ணன் கூறினார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போன்று, பாமர மக்களுக்கும் நிர்வாகம் பாதுகாப்பு தர வேண்டும் என ஹரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வார்டு பகுதியில் செல்போனில் படம் பிடித்ததால் சிறு வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டதாகவும், ஹரி கிருஷ்ணன் மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || பரபரப்பை கிளப்பிய ராதாவின் புகார் - நேரில் அழைத்த போலீஸ்

Award Ceremony | 72வது தேசிய திரைப்பட விருதுகள் விழா கோலாகலம்.. மாஸாக வந்திருந்த நடிகர் தனுஷ்

Fisherman | CM Vijay | புதிய தலைமை செயலகம் அரசாணை.. எதிர்த்து தேதி குறித்த சென்னை மீனவர்கள்

BREAKING || தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு... பதற்றத்தில் அதிகாரிகள்

Tngovt | புதிய நீதிமன்றங்கள்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு