தமிழ்நாடு

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து... உள்ளே இருந்த 30 பயணிகளின் நிலை..? - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

இராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரைக்குச் சென்ற அரசு நகர பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை ஓரம் உள்ள 3 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள், பயணிகளை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகர பேருந்து ஓட்டுநர் அத்திமுத்து, எதிரே வந்த டிராக்டருக்கு வழி விட பேருந்தை ஓரமாக நிறுத்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் தலைகுப்புற விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை