பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்- அன்புமணியின் படம் தவிர்ப்பு
ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் படத்தை தவிர்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கூட்டத்தில், ஒட்டுமொத்த ஈரோடு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடர்ந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம், கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் அன்புமணி ராமதாசின் படம் தவிர்க்கப்பட்டிருந்தது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அன்புமணியின் படம் தவிர்க்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.