உறங்கும் போதும், நடக்கும் போதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, சட்டமன்ற வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது இவ்வாறு கூறினார். தம்மையும், முதல்வரையும் மிகவும் தரக்குறைவாக மு.க. ஸ்டாலின் விமர்சிப்பதாக டாக்டர் ராமதாஸ், வேதனை தெரிவித்தார்.