தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் இருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,1977 ஆம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்நாள் வரையில் செயலாக்கம் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.