தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில் பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனர் செவிலியர் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பேரணியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். "வாக்களிப்பது நம் ஜனநாயக கடமை" என கோஷமிட்டு, நான்கு ரத வீதிகளையும் மாணவிகள் சுற்றி வந்தனர்.