வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரின் தாய் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூருக்குசென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசும், சிறைத்துறையும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.