தமிழ்நாடு

7 பேர் விடுதலை - ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது : சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநருக்கு சட்டப்பாதுகாப்பு இருப்பதால் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மனு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்