நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விசாகன், சௌந்தர்யா ஜோடியின் இந்த திருமண வரவேற்பில், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதே போன்று வரும் 11ஆம் தேதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து 12 ம் தேதியும் போயஸ்தோட்ட இல்லத்தில் 3 வது முறையாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.