தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் - கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

மக்கள் மன்றத்தினர் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரஜினி மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்

தந்தி டிவி

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில், 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கட்சியாக மாற்றுவது, கட்சியின் பெயர், கொடி கொள்கைகள், புதிய கட்சியை எப்போது அறிவிப்பது, அதற்கான மாநாட்டை எங்கே நடத்துவது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை மூன்றாவது முறையாக நடிகர் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்